கூடைப்பந்து !
26-04-2016
04:02 PM
பேரண்டி பாஸ்கட்பால் டீம்வீரன்
பேஸ்பாலிலும் அவனே உண்டாம்
மாட்சில் விளையாடும் தருணம்,
மற்றவீரர் போல் பாதக்குறடும்
வேண்டுமாம், அதற்காக அப்பாவை
வேண்டி, மாலுக்குப் போய் தேடி,
கொண்டுவந்தான் ஒரு ஜோடி
கூத்தாடி, கூத்தாடி விளையாடி
ஜெயித்து வந்தான், மெடலு !!பேரழகன் !
19-04-2016
08:58 PM
எதையேனும் எடுத்து என்னை அழகு
படுத்த எத்தனிப்பாள், என்னவள்.
அதையே நானும் அணிந்து என்னை
அழகுபடுத்த அவாவுடனிருப்பேன்.
கதையில் வரும் கதாநாயகனாய்,
கவர்ச்சியாய் வலம்வர, நானோ9
உதைதரும் பேரக்குழந்தைகளிடம்,
உபத்திரத்தை தவிர்க்க ஓடுவேன் !
உபத்திரத்தை தவிர்க்க ஓடுவேன் !
No comments:
Post a Comment