06-08-2015
11:03
தோள்வலிக்கு தோள்மூட்டு பூட்டுதனைப்
போட்டேன், மூன்று நாள்; பரவாயில்லை.
தோப்புக்கரணம் ஒரு பயிற்சியே,மூட்டுவலிக்கே.
தோல்வி கண்டேன்; வலது கை இடது
தோளுக்கு கொண்டு செல்ல முடியாததால்.
தோன்றாத் துணைவன் இறைவனைத்
தோத்திரத்தால் வேண்டி, தொழுது வணங்கி
தோளும், சிரமும் தரையில் பட்டெழுந்தேன்.
வலிசிறிது குறைந்தது, இப்போ,
வலியும் குறயும், தினமும் வணங்க.
உடல்
வலிமையும் கூடும், வணங்குதல் நன்றே.
வணங்கும் முன்னே பார்க்க வேண்டும்,
வனிதாமணி யாரும் முன்னே இல்லையென,
வம்பு வழக்கு வரவாய்ப்பில்லை அல்லவா.
வல்லவன் இறைவன் அவனே, வலியைக் கொடுத்து, வலியை குறைக்கும் வைத்தியரும் அவனே !
சென்னையில், 10ம் தேதி ஒரு
செகண்ட் ஒபீனியனுக்காக பலர்
யோசனையில், வை.பிரேம்குமார்,
எம்.எஸ்(ஆர்தோ) சந்தித்தேன்,
சைலு, வெங்கடேஷ் உதவிஉடன்.
கன்சல்டேஷன் தொடர்ந்தது,
எம்ஆர்ஐ எடுக்கச் சொல்லியனுப்பி
ஸ்கேன் வேர்ல்டு வந்துள்ளோம்.,
No comments:
Post a Comment