15-08-2015
13:05
போலாமா என்றார், மாப்பிள்ளை.
போலாமே என்றேன், கூட்டிப்போய்
சலூனில் விட்டார்.சுமாரான கூட்டம்.
சற்று நேரத்தில் தலை கொடுத்தேன்,
முடி திருத்த யத்தனித்த நாவிதர், முன்னே என்னிடம் கேட்டாரோரு
கேள்வி,"எண்ணவோ, வெட்டவோ".
கர்ணன் ,"எடுக்கவோ,கோக்கவோ"
மகாபாரதக் கேள்வி மனதில் வர,
மட்டமாய் வெட்டவும் வேண்டினேன்.
இருபது நிமிடங்கள் வெட்டினான்.
இருக்கையை விட்டு எழுந்தேன்.
மாப்பிள்ளை தலை திருத்தபடவே,
மற்றோரு பக்கம் முடியுமட்டும்,
காத்திருந்து, காசு கொடுத்து, மூக்கு
கண்ணாடிக்காக, அடுத்திருந்த
கடைக்குள் நுழைந்து, முயன்றோம்.
கண்ணாடிக்கும் ஆர்டர் கொடுத்து,
மறுநாள் வாங்கும் வகையில் செய்து
மறக்காமல் "பில்" தொகை தந்தோம்.
ஆக மொத்தத் தொகையும் சேர்த்து,
அவரே கொடுத்து விட்டார், பணமாக.
வீட்டுக்கு வந்ததும் நான் கொடுக்க,
வீண் வாதம் எழுவே, மகளிடம் தந்து,
சமாளித்தேன். பார்த்த என்னுடைய
சகதர்மினியும் என்னைக் கடிந்தாள்.
No comments:
Post a Comment