Monday, May 2, 2016

பட்ட காலிலே படும்.

03-08-2015
10:36

பிறந்த நாள் ஆகஸ்ட் 2,
புரண்ட நாளாகி விட்டது ,
   சிவசைலத்தில்.2 ம் தடவை ,
    கோவிலுக்குப் போகாமல் ,
     குளிக்க ஆறு நோக்கி ஓடுகையில்,
புல்தடுக்கி, பாதம் பிறல்ந்து,
முன்னோக்கி ஓடி, பாலன்ஸ்
    தவறி, விழுந்து எழுந்த வேளை,
     வலது தோள்மூட்டு நழுவியது.     
        அதிகமில்லை; ஆனாலும் கை
தூக்க இயலவில்லை, தோளுக்கு
    மேலே. வலி, வலிதாகிக் கொண்டே
        போக, ஆர்த்தோ டாக்டர்  இடம்,
           அறிவுரை வாங்கி  வீடடைந்தேன்,
                 அடுத்த நாள் லீவு போட்டேன்..
வானவூர்தி பயணம்.

08-08-2015
10:10

புரபெல்லர் சுழண்டது, காலை9:35,
புறப்பட்டே விட்டது, ஸ்பெசிஜெட்.
அரைமணி நேரம், திருச்சி காவேரி,
அடுத்த அரை அவர் சென்னையே.
பாலாற்றைக் கடந்து பறந்தது,10:20,
10 மணித்துளியில் வங்காளவிரிகுடா!
வட்டமிட்டது, கடலின் பக்கம்,
வந்தேவிட்டது, மீனம்பாக்கம் !
அடையாறு நெளிந்தோடுது அழகாக
அடுக்கு மாடி தெரியுது, அடுத்தாக.
கத்திபாரா பாலம், கண்ணுக்குக்
கவர்ச்சி, வாகனங்கள் வரிசையாய்
வந்து இறங்கும் அழகு, அடடாஅடடா,
வரவேற்றான், மகிழ்வுடன் மகனும்.
விமானநிலையம் இறங்க 11:00,
வீட்டையடைய மணியும் 12:00.
ஒரே மணிநேரம் விமானப் பயணம்,
ஒரு மணி நேரம் கார் பயணம், வீடு !

இரண்டாம் நாளிலே...

20-08-2015
13:55

எதுவும் செய்யலாம், இடதுகையால்
என்ற எண்ணம் எழுந்தது, என்னுள்,
அறுவை முடிந்த   அந்த இரவில் வலி
அதிகமானதால் தூக்கமும் இல்லை,
சொட்டுத் திரவம் இடதுகையில் ஏற
பொட்டுத் தூக்கமில்லை எனக்கும்
விக்கி கேட்ட விசாரிப்புக்கு,
விபரமான பதில் இதுதான்.

Click to ReplyReply All or Forward
    நேற்றுடன் சென்னை அடைமழை, மிதமழையானது.
        சென்னைக்கு வந்த சீரழிவு காற்றழுத்தம் சீரானது.
    நேரத்தில் இன்றோ கலைஞர் டிவியில் பூம்புகார் !
          நீதி மறந்த மதுரைக்கு பேரழிவு, முடிவில் !
    நிமிடத்தில் சேனலில் மாற்றி, ஜெயா டிவியில் பார்க்க,
          நேரம் நல்ல நேரம் என்ற பாட்டு ஒளிபரப்பு !
    நேருக்கு நேர் மோதாமல், மக்களைக் குழப்பினால்,
          தேர்தல் சமயம் பிரசார உத்திக்கு உதவுமே !
    மூட்டை முடிச்சு !

    04-11-2015
    12:16

    காலை எழுந்ததும் வெளி வந்தேன் 
    கனேசனைப் பார்த்து மகிழ்ந்தேன்.
    இனி என்ன, நடைப்பயிற்சி, ஊருக்கு
    கிளம்ப  உடைமை அடுக்க, நடக்க,
    கிளர்ச்சி கொடுக்குமே, உடற்பயிற்சி !
    புறப்படுதலே அடுத்த நண்பகலே,
    பெட்டியில் எதை அடுக்க எதை விட,
    என்ற சிந்தனைச் சிதறலே, நேரத்தை
    எடுத்துப் புரட்டியெடுக்க சிலமணி
    நேரம் ஒடிவிட்டது. அடுக்கி விட்டால்,
    நினைத்ததை திருப்பி எடுக்க முடியாது.

    ஒரு மாதிரி அடுக்கி, அடைத்தும்
    ஒருவாறு காரில் அனுப்பியும் விட
    கனேசனும் கிளம்பிச் செல்ல, 10:30,
    காலையும் ஆனது, அதற்குள் இரு
    தடவை பெட்டியைத் திருத்தியும்
    தாமதப் படுத்தி விட்டோம். மாலை,
    பிஸியோ பயிற்சி, சீபராஸ் விஜயம்,
    பின்பு DOC, படுக்கை, நித்திரை, etc !
    2015-12-08 20:35 GMT-08:00 Kalyanisundaram <carkalyani@yahoo.com>:
    வலியறியார் நான் கைகளைத் தூக்கி, தலையில்
        வாரும்காலை. ஆதரவுடன் என்னை விளித்துமே
    வலிக்குதா என்றே கேட்க மட்டுமே பிறரால் முடியும்.
         வலதுகையைத் தூக்கித் தலையில் முடியிடையே
    வகிடு எடுக்கையில் நான் படும் வேதனை யாரறிவார்.
          வாகாக, கேசம் பிரித்து, இடம் வலம் ஒதுக்கி,
    வடிவழகாக முடியலங்காரம் முடித்து, வெளியே
          வந்தால், ஏன் இவ்வளவு நேரமென்று கேள்வி !
    பேரழகன் !

    19-04-2016
    08:58 PM

    எதையேனும் எடுத்து என்னை அழகு
       படுத்த எத்தனிப்பாள், என்னவள்.
    அதையே நானும் அணிந்து என்னை
       அழகுபடுத்த அவாவுடனிருப்பேன்.
    கதையில் வரும் கதாநாயகனாய்,
       கவர்ச்சியாய் வலம்வர, நானோ
    உதைதரும் பேரக்குழந்தைகளிடம்,
       உபத்திரத்தை தவிர்க்க ஓடுவேன் !