டிஸ்சார்ஜ் !
21-08-2015
13:54
மூன்றாம் நாள், முந்தாநாள் கட்டு
முடிச்சு பிரித்த கையோடு, மாலை
திரும்பலாம், என்றவர் மீண்டும்
திங்களன்று வரச்சொன்னார்.
கூடவே சில மாத்திரைகள்
கூடாதுகள், பல ஏகப்பட்டது.
வலது கையை தூக்கக்கூடாது,
இடது கையால்தான் எதுவும் கூடும்,
குளிக்கக் கூடாது; மனைவியிடம்,
இவர் உடலை ஈரத்துணியால்
துடைக்கச் சொல்லி வேண்டுகோள் !
நல்ல வேளை, அவரே சொல்லிவிட்டு,
நம்மிடம் திரும்பி, மெதுவாக, இனி
மூன்று வாரம் இப்படியே, அதுவும்
முடியவில்லை, ஒரு மாதம் அப்படி.
தலையை ஆட்டினேன், ஆகா நம்
உடலை, டேபிளாக எண்ணி, தினமும்
துடைத்து விடச் சொல்லி, டாக்டரே,
துணை செய்கிறாரே, சரியென்றேன்
மகளின் பிறந்த நாளைக்காக,
மலர் வடிவத்தில் ஒரு கேக் ஆர்டர்
வழியில். வந்து சேர்ந்தேன், மகளை
வாழ்த்தவும், வாயில் கேக் பெறவும்,
ஒத்தை கையை மடக்கி, இடது கை
ஒசத்தி வாழ்த்தினேன், வாழ்கவென !
21-08-2015
13:54
மூன்றாம் நாள், முந்தாநாள் கட்டு
முடிச்சு பிரித்த கையோடு, மாலை
திரும்பலாம், என்றவர் மீண்டும்
திங்களன்று வரச்சொன்னார்.
கூடவே சில மாத்திரைகள்
கூடாதுகள், பல ஏகப்பட்டது.
வலது கையை தூக்கக்கூடாது,
இடது கையால்தான் எதுவும் கூடும்,
குளிக்கக் கூடாது; மனைவியிடம்,
இவர் உடலை ஈரத்துணியால்
துடைக்கச் சொல்லி வேண்டுகோள் !
நல்ல வேளை, அவரே சொல்லிவிட்டு,
நம்மிடம் திரும்பி, மெதுவாக, இனி
மூன்று வாரம் இப்படியே, அதுவும்
முடியவில்லை, ஒரு மாதம் அப்படி.
தலையை ஆட்டினேன், ஆகா நம்
உடலை, டேபிளாக எண்ணி, தினமும்
துடைத்து விடச் சொல்லி, டாக்டரே,
துணை செய்கிறாரே, சரியென்றேன்
மகளின் பிறந்த நாளைக்காக,
மலர் வடிவத்தில் ஒரு கேக் ஆர்டர்
வழியில். வந்து சேர்ந்தேன், மகளை
வாழ்த்தவும், வாயில் கேக் பெறவும்,
ஒத்தை கையை மடக்கி, இடது கை
ஒசத்தி வாழ்த்தினேன், வாழ்கவென !
No comments:
Post a Comment