10-08-2015
19:36
அரைமணி காத்திருப்பு ஸ்கேனில்,
அரைமணி உள்ளிருப்பு அதனுள்ளே.
ரிசப்சன் கிளி சொன்னது: 4:30க்கு வா.
ரிட்ர்ன் டூ ஹோட்டல், 3:00 மாலை,
மத்தியானச்சாப்பாடு இப்போதான்.
மறுபடியும் ஸ்கேன், ரிப்போர்ட் பெற.
ஆர்வமிகுதியால் நானும் பார்க்க,
அய்யோ, முற்றும் கிழிவு என்றிருக்க,
அடி விழுந்தது, ஆபரேசன்தான் தீர்வு.
பிரேம்குமார் எம்மார்ஸ்கேனைப்
பார்த்து, தலையசைத்து பின்தன்
பிரண்ட், பெரிய டாக்டர் லெனினைப்
பார்க்கச் சொல்லி வழிப்படுத்தவே,
அவரைத் தேடிக் கண்டுபிடித்தோம்.
அவரும் பரிசோதித்து, சிடிஸகேன்
ஒன்று எடுக்கச் சொல்லி அத்துடன்,
ஒவ்வொரு பிளட் யூரின் முதலியன
எழுதிக்கொடுத்தார்; ஸர்ஜரி முடிவு.
மறுநாள் உறவுகள் மூன்றாவது
மறுஆஃவு கேட்கலாமே என்று ,
மூன்றாவதாக, போன் & ஜாயின்ட்
முன்பு நின்றோம்; இவர் மகள்
தோழியின் மைத்துனராம். இவர்
சொன்னமுறை என்னை ஈர்க்க,
நானும் தலையாட்ட, மனைவியோ,
நாலாவது ஒபீனீயன் வேண்டினாள்.
அடுத்ததாக, மந்தவெளி சுப்பிரமணி,
அன்பர் வை.திருமலை சொல்படி
பார்த்தோம்; என் வயதொத்தவர்,
என் எண்ணப்படியே, ஆர்த்தோ
ப்ளாஸ்டியையே ஆதரித்தார், ஆம்.
எனில் அவர் கைகாட்டும் இடமே
ஏற்றது என்றார், வாழ்க்கைக்கும்.
எனச் சொல்லி முகவரியும் தந்தார்.
அன்னார் சொன்ன முகவிலாசம்,
அண்ணாநகரில் இருந்தது. காரை
அப்பக்கம் திருப்பி ஓட்டினோம்.
அம்முகவரி கணடுபிடித்தோம்.
அவ்வைத்தியர் கண்டு பேசினோம்.
அத்தனையும் பரிசோதித்து எனை
அன்புடன் அறுவை முறைகளை
ஆர்வமுடன் விவரித்துச் சொல்லி
அனுப்பி வைத்தார், 17/7/2015 அன்று
ஆப்ரேசனுக்கு நாளும் குறித்து.
No comments:
Post a Comment